விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் விரைவில்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், எதிர்வரும் 20ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக, நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தாண்டின் பின்னரான முதலாவது நாடாளுமன்ற அமர்வு, எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அன்றைய தினம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டு குறித்த சட்டமூலம், நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்