மட்டக்களப்பில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

-ஆர். நிரோசன்-

மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள புகையிரத கடவையில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியை சேர்ந்த ராசநாயகம் ரமேஸ்குமார் (வயது-45) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவரின் சடலம் காணப்படுவதாக மட்டக்களப்பு  பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் நேற்று வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல் போயிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த நபர் நேற்று வியாழக்கிழமை இரவு பயணித்த ரயிலில் அல்லது இன்று அதிகாலை பயணித்த ரயிலில் மோதுண்டு உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Batticaloa