கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனை அதிகரிப்பு

கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனை அதிகரிப்பு

பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கேளிக்கை வெடி பொருட்களின் உற்பத்திக்கு அவசியமான மூலப்பொருட்கள் இன்மையால் உற்பத்தி நடவடிக்கைகள் 20 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதா அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், சித்திரைப் புத்தாண்டை இலக்காக கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட கேளிக்கை வெடிப் பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தினேஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்