
மியன்மார் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடை அரிசி வறிய குடும்பங்களுக்கு வழங்கி வைப்பு
-கிரான் நிருபர்-
பொருளாதார நீதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் வறிய குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்வு இன்று புதன் கிழமை வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 9000 மெற்றிக்தொன் தனது வர்த்தக வாணிப அமைச்சு ஊடாக வந்ததாகவும், அதனை மாவட்டத்தின் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் பிரித்து அவ் பிரதேசத்திற்குட்பட்ட கிராமங்களிலிருந்து இனங்காணப்பட்ட வறிய குடும்பங்களை இவ் அரிசி வழங்கப்படுவதாக தெரிவித்தார்
இப் பிரதேசத்தில் வறியவர்கள் என இனங் காணப்பட்ட 750 குடும்பங்களில் இன்று 350 குடும்பங்களுக்கு இதன் போது ஒரு குடும்பத்திற்கு தலா 20 கிலோ அரிசி பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வு, பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வர்த்தக வணிப இராஜங்க அமைச்சர் ச. வியழேந்திரன் கலந்து கொண்டு இனங் காணப்பட்ட குடும்பகளுக்கு மியன்மார் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசியினை வழங்கி வைத்தார்..



