ஆலய சூழலில் நோய்களுடன் கால்நடைகள் நடமாட்டம்
-யாழ் நிருபர்-
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய சூழலில் நடமாடும் மாடுகள் சிலவற்றில் ஒருவகை நோய் தொற்று காணப்படுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று திங்கட்கிழமை பங்குனி திங்கள் இறுதி நாள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு சென்றிருந்தார்கள்.
இந்நிலையில் கோயிலின் வெளிப்புறம் பகுதியில் அதிகளவிலான கால்நடைகள் நடமாடித் தெரியும் நிலையில், அவற்றில் சிலவற்றில் கொப்பளம் போன்ற புண்கள் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது கொப்பளம் போன்ற அடையாளங்களுடன் புண்கள் காணப்பட்டதுடன் சில இடங்களில் தசைகள் வெடித்து இரத்தம் வழிவதும் அவதானிக்கப்பட்டுள்ளதாக கோயிலுக்கு சென்றவர்கள் தெரிவித்தனர்.
தினசரி அதிகளவிலான சிறுவர்கள் பெண்கள் என குறித்த ஆலயத்திற்கு செல்லும் நிலையில் சிறுவர்கள் அங்கு நடமாடும் கால்நடைகளுக்கும் உணவுகளை வழங்குகின்றனர்.
இவ்வாறான நிலையில் கால்நடைகளுக்கு நோய் தொற்று உள்ளமை அவதானிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி பணிமனை உரிய கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்