இலங்கை பெண் சவுதி அரேபியாவில் காணாமல் போயுள்ளார்
இலங்கை பெண் சவுதி அரேபியாவில் காணாமல் போயுள்ளார்
சவுதி அரேபியாவிற்கு இரு பிள்ளைகளின் தாயான பெண் ஒருவர் பணிப்பெண்ணாக சென்றுள்ள நிலையில் காணாமல் போயுள்ளதாக அவரின் உறவினர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கோமதி பஞ்சலிங்கம் (39 வயது) என்ற பெண்ணே காணாமல் போயுள்ளதுடன், குறித்த பெண் காணாமல் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் உரையாடியதாகவும், வீட்டு உரிமையாளர்கள் தன்னுடை கையடக்க தொலைபேசியை எடுத்துக்கொண்டு தர மறுத்ததாகவும் பின்னர் முரண்பாட்டுடன் பெற்றுக்கொண்டதாகவும் குறித்த பெண் தொலைபேசியில் குறிப்பிட்டதாகவும் குறித்த பெண்ணின் கணவர் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வீட்டின் உரிமையாளர்களிடம் இது தொடர்பில் வினவியதற்கு வீட்டின் உரிமையாளரான ஆண் குறித்த பெண் ஏணி ஒன்றின் உதவியுடன் தப்பிச்சென்றதாகவும், வீட்டு உரிமையாளரான பெண் குறிப்பிடுகையில் வீட்டின் முன்வாசல் வழியாகவே தப்பிச்சென்றுள்ளதாகவும் இருவரும் முரண்பட்ட பதிலை வழங்குவதாகவும் முறைப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவரை மீட்டு தருவதற்கு அரசாங்கம் உதவி புரிய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்