மட்டக்களப்பில் தொழிற்சங்கங்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பில்   கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வரிக்கொள்கை, மின்சார கட்டணம் அதிகரிப்பு, வங்கி வட்டி அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பல தொழிற்சங்கங்கள் ஒரு நாள் அடையாள தொழிற்சங்க போராட்டத்தினை இன்று புதன்கிழமை ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில் இலங்கை வங்கி ஊழியர் சங்கம், இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்து இன்று நண்பகல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்