மட்டக்களப்பில் மண்மாபியாக்களின் பெயர்களை ஆதாரங்களுடன் வெளியிடுவேன் – வியாழேந்திரன் அதிரடி

மட்டக்களப்பில் மண்மாபியாக்கள் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்களே என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

எமது செய்திகள் பிரிவின் “மின்னல் தேடல்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த வேளை மட்டக்களப்பில் மண்மாபியாக்கள் மற்றும் இலஞ்சம் பெற்றுக்கொண்டு வேலை பெற்றுக்கொடுப்பது போன்ற சட்டவிரோத சம்பவங்கள் இடம்பெறுவது தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பி போது அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும், மட்டக்களப்பில் மண் மாபியாக்கள் தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் தான் என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது என தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து கொண்ட “மின்னல் தேடல்” நிகழ்ச்சியின் முழுமையான காணொளியை கீழே காணலாம்.