திடீரென தோன்றிய சிவலிங்கத்தால் பரபரப்பு

-கிளிநொச்சி நிருபர்-

வடமராட்சி மருதங்கேணி புதுக்காடு வீதியில் மருதங்கேணி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் இரவோடு இரவாக சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது.

இன்று சனிக்கிழமை காலை வீதியால் பயணித்த மக்கள் சிவலிங்கத்தை அவதானித்துள்ளனர்.

இந் நிலையில் பிரதேச மக்கள் சென்று சிவலிங்கத்திற்கு வழிபாடுகளை ஆற்றி வருகின்றனர்