சுவிட்சர்லாந்தில் தொலைபேசி மோசடியில் 200,000 பிராங்குகளுக்கு மேல் பணத்தை இழந்துள்ள தம்பதியினர்
சுவிட்சர்லாந்தில் தொலைபேசி ஊடக ஒரு குழுவினர் கடந்த சில நாட்களாக மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் ஒரு தம்பதியினர் சுமார் 200,000 பிராங்குகளுக்கு மேல் மதிப்புள்ள பணத்தையும் , தங்கத்தையும் இழந்துள்ள நிலையில் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, பொது மக்களுக்கு பொலிசார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
மோசடி செயல்களில் ஈடுபட்டவர்கள் தங்களை பொலிஸார் என தொலைபேசியில் தொடர்பு கொண்டே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, தெரியவருகின்றது.
குறித்த தொலைபேசி அழைப்பில் அறியப்படாத நபர்; ஒரு கற்பனைக் கதையைச் சொல்கிறார், உதாரணமாக ஒரு குடும்ப உறுப்பினர் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் போக்குவரத்து விபத்தைப் பற்றி போலியான தகவல்களை தெரிவித்து இவ்வாறான மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று புதன்கிழமை சுக் மாநிலத்தில் உள்ள ஒரு திருமணமான தம்பதியினரிடம் போலி பொலிஸ் அதிகாரிகள் பலமுறை தொடர்பு கொண்டு மகள் வீதியில் சிவப்பு விளக்கு எரிந்த நிலையில் கடுமையான போக்குவரத்து விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து மகள் கைது செய்யப்பட்டு தற்போது காவல் நிலையத்தில் உள்ளார். 300,000 செலுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.
தங்கள் மகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தம்பதியினர் மொத்தம் 200,000 பிராங்குகள் மற்றும் சுமார் 15,000 பிராங்குகள் மதிப்புள்ள தங்கம் ஆகியவற்றை இரண்டு வெவ்வேறு வங்கிகளில் இருந்து எடுத்துக் கொண்டு குறித்த நாளின் நண்பகல், அடையாளம் தெரியாத ஆண் ஒருவரிடமும் , பிற்பகல் அடையாளம் தெரியாத பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.
பணம் ஒப்படைப்புக்குப் பின்னர் அடையாளம் தெரியாத குறித்த குற்றவாளிகள், உங்கள் மகள் இப்போது காவல்துறையினரால் வசிக்கும் இடத்திற்கு கொண்டு சென்று விடப்படுவாள் என்று தம்பதியினருக்கு உறுதியளித்தாக தெரியவருகின்றது.
கடந்த சில நாட்களாக சுக் மாநிலத்தில் உள்ள பலருக்கும் இது போன்ற தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. இருப்பினும், மக்கள் அனைவரும் சரியாக பதிலளித்து உடனடியாக அழைப்பை முடித்துக்கொண்டுள்ளனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சொத்துக்களைக் குறிவைத்து தொலைபேசி மோசடி செய்பவர்கள் தொடர்பாக விழிப்பாக இருக்குமாறு பொலிசார் எச்சரித்துள்ளனர்.
குறித்த மோசடி கும்பல் சொல்லும் கதைகள் கற்பனையானவை. அத்தகைய அழைப்புகளை ஒருபோதும் ஏற்க வேண்டாம்.
உங்கள் அன்புக்குரியவர்களைத் தொடர்புகொண்டு, அவர்கள் நன்றாக இருக்கிறார்களா அல்லது சொல்லப்பட்ட கதை உண்மையானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களுக்குத் தெரியாத எவருக்கும் பணம், நகை அல்லது பிற மதிப்புமிக்க பொருட்களை கொடுக்கவோ வேண்டாம்.
பலர் சுவிஸ் தொலைபேசி எண்களால் தவறாக வழிநடத்தப்படாதீர்கள் எனவும், அழைப்பவரின் எண்ணை மாற்றுவது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் எளிதானது எனவும் பொலிசார் பொது மக்களிடம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.