சூரியனின் ஒரு பகுதி திடீரென உடைந்துஇ சூரியனின் வட துருவத்தில் ஒரு பெரிய நெருப்பு சூறாவளி ஏற்பட்டு, அது மேற்பரப்பில் சுழன்று வருவதால் விஞ்ஞானிகள் கலக்கமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இது தொடர்பான படங்கள் இணையத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூமி உள்ளிட்ட சூரியக் குடும்பத்தில் இருக்கும் எல்லா கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருவது அனைவருக்கும் தெரிந்த விடயம் பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் சூரியன் தான் அடிப்படையாகும் சூரிய கதிர்கள்தான் இங்கு அனைத்து உயிரினங்களும் அடிப்படையாக இருக்கிறது.
அமெரிக்காவின் நாசா தான் சூரியன் குறித்த ஆய்விலும் முன்னிலையில் உள்ளது. பல கோடி மைல் தொலைவில் இருக்கும் இந்த சூரியனை ஆய்வாளர்கள் இங்கிருந்தபடியே ஆய்வு செய்து வருகின்றனர். இப்போது சூரியனில் நிகழ்ந்துள்ள அற்புதமான மாற்றத்தை கண்டு ஆய்வாளர்கள் அதிர்ச்சியும் , கலக்கமும் அடைந்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிகழ்வு நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் பிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர் டாக்டர் தமிதா ஸ்கோவ் என்பவர் தனது ட்விட்டரில் இதைப் பகிர்ந்திருந்துள்ளார்.
சூரியனில் இருந்து எப்போதும் சோலார் பிளார்ஸ் வெளியாகும் இது சில நேரங்களில் பூமியில் உள்ள தகவல்தொடர்புகளைக் கூட பாதிக்கும். எனவே, சூரியனில் என்ன நடந்தாலும் அது ஆய்வாளர்களுக்குக் கவலையையே ஏற்படுத்தும். இதன் காரணமாகவேதான் ஆய்வாளர்கள் இது தொடர்பாகத் தீவிரமான ஆய்வில் இறங்கியுள்ளனர்.
இது தொடர்பாக ஆய்வாளர் டாக்டர் தமிதா ஸ்கோவ் தனது ட்விட்டரில், “சூரியினில் வடக்கின் முக்கியப் பொருள் பிரிந்து இப்போது நமது நட்சத்திரத்தின் (சூரியன்) வட துருவத்தைச் சுற்றி ஒரு பெரிய சூறாவளி போன்ற ஒன்றை உருவாக்கி வருகிறது. அங்கு ஏன் இப்படி நடந்துள்ளது என்பதைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.
சூரியன் மேற்பரப்பில் இருந்து வெளிப்புறமாக விரிவடைவது கடந்த காலங்களில் நடந்துள்ளன. ஆனால், இந்த முறை அது தனியாக பிரிந்து வந்து பெரியளவிலான சுழலை உருவாக்கியதே ஆய்வாளர்களைத் திகைக்க வைத்ததுள்ளது.
தொடர்ந்து பல ஆண்டுகளாகச் சூரியன் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அமெரிக்கத் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர் ஸ்காட் மெக்கின்டோ “சூரியனில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி உடையும்போது இவ்வளவு பெரிய சுழல் ஏற்படுவதை நான் ஒருபோதும் பார்த்ததே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
இது ஏன் இப்படி நிகழ்ந்தது இதனால் பூமிக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமா என்பது குறித்து ஆய்வாளர்கள் தொடர் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். பூமியில் இருந்தபடியே ஆய்வாளர்கள் சூரியனை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
சூரியனின் ஒரு பகுதி இப்படி தனியாகப் பிரிந்தமைக்கு என்ன காரணம் என்பதை இதுவரை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த பிரிவால் பூமிக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து எதையும் இதுவரை ஆய்வாளர்களால் உறுதியாக கண்டறியவில்லை.
இருப்பினும், சூரியனின் காந்தப்புலத்தின் தலைகீழ் மாற்றத்துடன் இது தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். அதாவது ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனின் காந்தப்புலன் தலைகீழாக மாறும். இதற்கும் இப்போது ஏற்பட்டுள்ள நிகழ்வுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் ஆய்வு செய்து வருகிறார்கள்.
சூரியனில் அவ்வப்போது சூறாவளிகள் ஏற்படும். இந்த சூரியப் புயலால் தகவல் தொழில்நுட்ப தொடர்புகள் பாதிக்கப்படும். ஆனால், இப்போது சூரியனின் வடக்குப் பகுதியிலிருந்து ஒரு துண்டே உடைந்துள்ளது இதனால் பெரிய அளவில் சூறாவளியாக சூரியனின் வட துருவத்தின் மேலே நெருப்பாய் சுழன்று கொண்டிருக்கும் இத்தருணத்தில் , இது பூமிக்கு எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
