Last updated on April 28th, 2023 at 04:46 pm

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்தல்

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்தல் : 03 பேர் கைது

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக கடத்தி செல்லப்பட்ட பத்து கோடி இந்திய ரூபா பெறுமதியான தங்கத்தை இந்திய கடலோர காவல்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில், தமிழக மண்டபம் பகுதியில் கடலில்  படகில் கடத்தி  சென்ற 17 கிலோவுக்கும் அதிகமான தங்கம் கடலோர காவல்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

சந்தேகத்திற்கிடமான கப்பலைக் கண்காணித்த பின்னர் இந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் சோதனையின் போது இதேபோன்ற மற்றொரு தங்கம் கடலின் அடிப்பகுதியில் வீசப்பட்டிருக்கலாம் என காவல்படையினர்  சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கப்பலில் இருந்த 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.