இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் தொழுநோய் அதிகரிப்பு

இலங்கையில் உள்ள தொழுநோயாளிகளில் 10 சதவீதமானோர் சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

உலக தொழுநோய் தினமான ஜனவரி 29 ஆம் திகதியை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்தி மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று நடைபெறவுள்ளதாக, விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வருடார்;ந்தம் சுமார் 2000 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும், இதில் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொழு நோய் ஏற்பட்ட ஒருவரின் உடலில் நீண்ட காலமான வெள்ளை நிற அடையாளம் மட்டும் காணப்படுவதால் அதனை நோயாக கருதி செயற்படுவதில்லை என, இதனால்தான் தொழு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார்.