Last updated on April 28th, 2023 at 03:24 pm

ஆசிரியர் இடமாற்றங்கள் விரைவில் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் | Minnal 24 News

ஆசிரியர் இடமாற்றங்கள் விரைவில் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும்

ஆசிரியர் இடமாற்றங்கள் விரைவில்  ஆன்லைன் முறையின் மூலம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு இன்று  திங்கட்கிழமை  அறிவித்துள்ளது.

NEMIS-THRM  எனப்படும் மனித வள மேலாண்மை அமைப்பில் சேமிக்கப்பட்ட தனிப்பட்ட மற்றும் சேவைத் தரவுகளுடன் இடமாற்றங்கள் செய்யப்படும் என்று தெரியவருகின்றது.

எனவே, ஆசிரியர்களால் வழங்கப்படும் தகவல்களின் துல்லியத்தை ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டியது அவசியம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய முறை குறித்து அனைத்து அரச பாடசாலை ஆசிரியர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://nemis.moe.gov.lk/    ஊடாக மனித வள முகாமைத்துவ தகவல் அமைப்பை அணுகுமாறும், வழங்கப்பட்ட தகவல்களின் துல்லியத்தை உறுதிப்படுத்துமாறும் அமைச்சு ஆசிரியர்களை கேட்டுக் கொண்டுள்ளது. திருத்தங்கள் இருந்தால், மாகாண கல்வி அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.