96வது ஒஸ்கர் விருது நிகழ்ச்சி
96வது ஒஸ்கர் விருது நிகழ்ச்சி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டொல்பி திரையரங்கில் நடைபெற்றது.
இதில் சிறந்த படம், நடிகர், துணை நடிகர், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட 7 விருதுகளை ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படம் தட்டிச்சென்றுள்ளது.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஓபன்ஹெய்மர் திரைப்படம் அணுகுண்டை தயாரித்த ஜே. ரொபர்ட் ஓபன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்டு உருவானது.
ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி நகர்களின் மீது அணுகுண்டு போடப்பட்டு பல லட்சம் உயிர்கள் பலியாக தான் காரணமாகி விட்டோம் என வருந்தும் காட்சிகளிலும், இந்த உலகமே அழியப்போகுது என நினைக்கும் காட்சிகளிலும் தனது நடிப்பால் சிலியன் மர்பி அசத்தியிருந்தார்.
சிறந்த படம்
ஓப்பன்ஹெய்மர்
சிறந்த இயக்குனர்
கிறிஸ்டோபர் நோலன் (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த நடிகர்
சிலியன் மர்பி (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த நடிகை
எம்மா ஸ்டோன் (Poor Things)
சிறந்த துணை நடிகர்
ராபர்ட் டவுனி ஜூனியர் (ஓப்பன்ஹைமர்)
சிறந்த துணை நடிகை
டாவின் ஜாய் ராண்டால்ஃப் – தி ஹோல்டோவர்ஸ்
சிறந்த திரைக்கதை
அமெரிக்கன் ஃபிக்ஷன்
சிறந்த ஒரிஜினல் திரைக்கதை
அனாடமி ஆஃப் எ ஃபால்
சிறந்த அனிமேஷன் திரைப்படம்
தி பாய் அண்ட் தி ஹெரான்
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்
காட்ஜில்லா மைனஸ் ஒன்
சிறந்த அனிமேஷன் குறும்படம்
ஜான் யோகாவின் இசையால் ஈர்க்கப்பட்ட ‘வார் இஸ் ஓவர்’
சிறந்த ஆடை வடிவமைப்பு
பூர் திங்க்ஸ்
சிறந்த மேக்கப் மற்றும் சிகை அலங்காரம்
பூர் திங்க்ஸ்
சிறந்த ஒளிப்பதிவு
ஓப்பன்ஹெய்மர்
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு
பூர் திங்க்ஸ்
சிறந்த சவுண்ட்
தி சோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்
சிறந்த திரைப்பட எடிட்டிங்
ஓப்பன்ஹெய்மர்
சிறந்த ஒரிஜினல் பேக்ரவுண்ட் ஸ்கோர்
ஓப்பன்ஹைமர்
சிறந்த ஒரிஜினல் பாடல்
வாட் வாஸ் ஐ மேட் ஃபார் (பார்பி)
சிறந்த லைவ் – ஆக்சன் குறும்படம்
தி வொண்டர்ஃபுல் ஸ்டோரி ஆஃப் ஹென்றி சுகர்
சிறந்த ஆவணக் குறும்படம்
தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்
சிறந்த ஆவணப்படத் திரைப்படம்
20 டேஸ் இன் மரியுபோல்
சிறந்த சர்வதேச திரைப்படம்
தி சோன் ஆஃப் இன்ரஸ்ட்