புனித சென் திரேசா முன்பள்ளியினால் சிறுவர் தின நிகழ்வுகள்

-வாழைச்சேனை நிருபர்-

சென் திரேசா முன்பள்ளியினால் பல்வேறு நிகழ்வுகள் மாணவர்களை கௌரவிக்கும் முகமாக நடைபெற்றது.

பாசிக்குடா கடற்கரையில் நடைபெற்ற நிகழ்வில் மலரும் மொட்டுக்கள் என்ற தொணிப்பொருளில் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது மாணவர்களின் பாண்டு வாத்தியம் இசைக்கப்பட்டதுடன்,மாணவர்கள் சமூகத்திற்கு சேவையாற்றிய பெரியார்களாக வேடம் பூண்டு உரையாடினார்கள்.

நாடகம்,பேச்சு,நடனம் என பல்வேறு நிகழ்கள் இடம்பெற்றதுடன் அவர்களை பாராட்டி பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டன. குறித்த நிகழ்வில் சென் திரேசா முன்பள்ளி ஆசிரியர்களான அ.ஜெசிந்தா,ஜோர்ஜ்செரிக்கா மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.