88 பிடியாணைகளில் தேடப்பட்ட சந்தேக நபர் கைது
88 பிடியாணை உத்தரவின் பேரில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரை நேற்று (11) அத்துருகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர் .
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து, அதுருகிரிய பொலிஸ் பிரிவின் கஜபா மாவத்தை பகுதியில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதான சந்தேக நபர், வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது .
பல பணமோசடி வழக்குகள் தொடர்பில் மொரட்டுவ, காலி, வரகாபொல மற்றும் பாணந்துறை நீதவான் நீதிமன்றங்களால் இந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன .
சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .
