80 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களுடன் ஒருவர் கைது

80 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களைச் சட்டவிரோதமாக தாய்லாந்திற்குக் கொண்டு செல்ல முயன்ற வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய வர்த்தகரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று இரவு 09.45 மணியளவில் விமானம் மூலம் தாய்லாந்தின் பேங்காக் நகரத்திற்குச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவரது பயணப் பொதியிருந்து 80 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து , சந்தேக நபர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவருக்கு 10 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.80 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களுடன் ஒருவர் கைது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்