
மரண கிணறு இடிந்து வீழ்ந்ததில் 8 பேர் காயம்
கண்டி பகுதியில் உள்ள விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த மரணக் கிணறு இடிந்து வீழுந்ததில் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 50 வயதுடைய பெண் ஒருவரும் 13, 36, 40, மற்றும் 45 வயதுடைய நான்கு ஆண்களும் கிராதுருகோட் மற்றும் மஹியங்கனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை திவுலபலஸ்ஸ, ரொட்டவெல பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மரணக் கிணறே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.
இரவு காட்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாக பயணச் சீட்டு பெற்று மரணக் கிணறு காட்சி முனை வரை சென்ற குழுவொன்று இந்த விபத்தை சந்தித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
