கொழும்பில் துப்பாக்கி சூடு: 3 பெண்கள் உட்பட 8 பேர் காயம்

கொழும்பு துறைமுகத்தின் 6வது நுழைவாயிலுக்கு அருகில் இன்று திங்கட்கிழமை இரவு தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டுப் பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் புளூமெண்டல் பகுதியை சேர்ந்த 5 ஆண்களும் 3 பெண்களும் காயமடைந்துள்ளதாக, இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.

கொழும்பு துறைமுகத்தின் 6 வது நுழைவாயிலுக்கு அருகில் உள்ள துறைமுகத்திற்கு சொந்தமான இரும்புகளை திருட வந்த இருவரை தடுக்க முற்பட்ட வேளை அங்கு வந்த சிலரால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் இருந்து துப்பாக்கியைப் பறிக்கச் சென்ற நபரகள் மீது மற்றுமொரு தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்