
8 வயது மாணவி துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலை ஒன்றில் மாணவியான 8 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஆசிரியர் நோர்வூட் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த பாடசாலையின் மாணவி ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம், ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்துடன் அவரை, ஹட்டன் நீதவான நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக குற்றத்தடுப்பு பிரவின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
