8 மாவட்டங்களில் தொலைபேசி சின்னத்தில் போட்டி!

தமிழ் முற்போக்கு கூட்டணி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் 8 மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன் தலைவர் மனோ கணேசன் இன்று திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஐக்கிய மக்கள் கூட்டணியின் தொலைபேசி சின்னத்தில் தமது வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.