
8 மாத குழந்தைக்கு எமனான தொலைபேசி சார்ஜர்
இந்தியாவின் கர்நாடகத்தின் உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் பகுதியில் நேற்று புதன் கிழமை தொலைபேசி சார்ஜர் மூலம் மின்சாரம் பாய்ந்து 8 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
கார்வாரை சேர்ந்தவர் சந்தோஷ் கல்குட்கர் மற்றும் சஞ்சனா தம்பதியின் சானித்யா என்ற 8 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த தம்பதி தொலைபேசியை சார்ஜ் செய்துவிட்டு சார்ஜரில் இருந்து தொலைபேசியை எடுத்த தம்பதியினர், பிளக்கில் செருகி இருந்த சார்ஜர் இணைப்பை அணைக்காமல் விட்டுள்ளனர்.
இதற்கிடையே அந்த சார்ஜர் வயரை பிடித்து சானித்யா விளையாடிக்கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அந்த வயரை தனது வாயில் திணித்து குழந்தை விளையாடியுள்ளது. அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் குழந்தையை தாக்கி சானித்யா பரிதாபமாக மரணித்துள்ளார்.
