• Likes
  • Followers
  • Subscribers
  • Followers
Sign in

Welcome, Login to your account.

Forget password?
Sign in

Recover your password.

A password will be e-mailed to you.

  • Saturday, January 10, 2026
  • தொடர்புகளுக்கு :- +94 65 222 7172 Mobile & Whatsapp :+94 76 273 2793

Minnal24 Minnal24 - Batticaloa News

  • செய்திகள்
  • Batticaloa News
  • உலக செய்திகள்
  • இந்திய செய்திகள்
  • Swiss Tamil News
  • Videos
  • Job Vacancies
Minnal 24 News
  • Home
  • செய்திகள்
  • 8 மாதங்களின் பின் கண்டு பிடிக்கப்பட்ட சிறுமி : 22 வயது இளைஞன் கைது!
செய்திகள்

8 மாதங்களின் பின் கண்டு பிடிக்கப்பட்ட சிறுமி : 22 வயது இளைஞன் கைது!

By News Editor Last updated Jul 8, 2023
Share

-பதுளை நிருபர்-

கடந்த 8 மாதங்களுக்கு முன் காணாமல் போன 14 வயது சிறுமி ஒருவர் பேலியகொட பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த 14 வயது சிறுமி பேலியகொட பகுதியில் தனது 22 வயது காதலனுடன் தங்கியிருந்த நிலையில் பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் 24 ஆம் திகதி லுணுகல சூரியகொட பகுதியில் உள்ள 14 வயது சிறுமி ஒருவரை காணவில்லை என சிறுமியின் பெற்றோரால் லுணுகல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

மேலதிக வகுப்பிற்கு சென்று வருவதாக தெரிவித்து வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி காணாமல் போயிருந்தார்.

அதனைத்தொடர்ந்து லுணுகலை பொலிஸாரால் சிறுமி குறித்த தகவல்கள் அனைத்து பொலிஸ் நிலையத்திற்கும் வழங்கப்பட்டு தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் லுணுகலை பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமைவாக பேலியகொட பொலிஸாரால் குறித்த சிறுமியும் 22 வயது இளைஞர் ஒருவரும் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு லுணுகலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவருடன் பேலியகொட பகுதியில் வாடகை விடுதியொன்றில் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது. மேலும் காணாமல் போன போது 14 வயதாக இருந்த குறித்த சிறுமியின் வயது தற்போது 15 வயதும் 4 மாதங்களும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமியை கடத்தி துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த 22 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் இன்று சனிக்கிழமை பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • செய்திகள்
  • நிகழ்வுகள்
  • உலக செய்திகள்
  • Videos
Join in Our Whatsapp Group
Batti News Todaybatti news today tamil சித்திரை 1 2023battinewsbattinews todaycomplaintdeath poster sinhalafuel pass qr code login. நலன்புரி நன்மைகள் பெயர் பட்டியல்household list
Share
தலைப்புக்கள்
  • உலக செய்திகள்2098
  • நிகழ்வுகள்1953
  • Videos1311
  • இந்திய செய்திகள்1079
  • இலங்கை செய்திகள்1022
  • கட்டுரை620
  • விளையாட்டு453
  • ஏனைய தொகுப்புரைகள்435
  • ஆரோக்கியம்256

ஏனையவை

தெஹிவளை துப்பாக்கிச்சூடு – காயமடைந்த நபர் உயிரிழப்பு

யாரையும் பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கில்லை: பிரதமர் அதிரடி

நாளை திட்டமிட்டபடி பிரம்மாண்டமாக வெளியாகிறது பராசக்தி

விஜய் ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி

அமைச்சர் குமார ஜயகொடிக்கு டி.வி. சானக்க பகிரங்க சவால்!

Prev Next 1 of 248

Latest News

தெஹிவளை துப்பாக்கிச்சூடு – காயமடைந்த நபர் உயிரிழப்பு

Jan 9, 2026

யாரையும் பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கில்லை: பிரதமர் அதிரடி

Jan 9, 2026

நாளை திட்டமிட்டபடி பிரம்மாண்டமாக வெளியாகிறது பராசக்தி

Jan 9, 2026

விஜய் ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி

Jan 9, 2026

அமைச்சர் குமார ஜயகொடிக்கு டி.வி. சானக்க பகிரங்க சவால்!

Jan 9, 2026

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு

Jan 9, 2026

இந்திய அணியின் திலக் வர்மா விலகல்

Jan 9, 2026

ஜூலி சங் – விஜித ஹேரத் சந்திப்பு

Jan 9, 2026

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த கடும் நடவடிக்கை

Jan 9, 2026

பாரிய கொள்ளை – மட்டக்களப்பில் சம்பவம்

Jan 9, 2026
Prev Next 1 of 4,661
© 2026 - Minnal 24 News. All Rights Reserved.
Minnal24.com is Ministry of Mass Media Registered News Website Proudly Owned by: Balanze Media
Sign in

Welcome, Login to your account.

Forget password?
Sign in

Recover your password.

A password will be e-mailed to you.