8 ஏர் இந்திய விமானங்கள் ரத்து

பராமரிப்பு பணி காரணமாக 8 ஏர் இந்திய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துபாயிலிருந்து சென்னைக்குச் செல்லும் விமானம், டெல்லியிலிருந்து மெல்பேர்னுக்குச் செல்லும் விமானம், மெல்பேர்னிலிருந்து டெல்லிக்குச் செல்லும் விமானம், புனேவில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானம், அஹ்மதாபாத்தில் இருந்து டெல்லிக்குச் செல்லும் விமானம், ஐதராபாத்திலிருந்து மும்பைக்குச் செல்லும் விமானம், சென்னையிலிருந்து மும்பைக்குச் செல்லும் விமானம் ஆகிய 4 சர்வதேச விமானங்களும் 4 உள்நாட்டு விமானங்களுமே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .