8 ஆவது மாடியிலிருந்து விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்

கொழும்பில் அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து பெண் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த 49 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை தனிப்பட்ட தொழில் நிமித்தம் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று மகன் வீட்டில் படித்துக் கொண்டிருந்த போது வீட்டில் இருந்த நாற்காலியை எடுத்துக்கொண்டு கட்டிடத்தின் 8ஆவது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து விசாரணையில் தெரியவந்தது.

உயிரிழந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது.

சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்