குளவி கொட்டுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில்

-பதுளை நிருபர்-

ஹப்புத்தளையில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் குளவி கொட்டுக்கு இலக்கான 06 பெண்களும் ஆண் ஒருவரும் ஹப்புத்தளை பங்கட்டி ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹப்புத்தலை சேர்வூட் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 29 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்ட 6 பெண்களும், கோனமுட்டாவ தோட்டத்தில் 65 வயதுடைய ஆண் ஒருவரும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை பங்கட்டி வைத்தியசாலையின் அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, ​​பிற்பகல் 2.20 மணியளவில் குளவி கொட்டியதால் 7 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்