60 அடி பள்ளத்தில் விழுந்த கார் : ஒருவர் பலி!
ஆனமடுவ பிரதேசத்தில் கார் ஒன்று 60 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார்.
ஆனமடுவ – தோணிகல, ஒருகல பகுதியைச் சேர்ந்த, 4 பிள்ளைகளின் தந்தையான சமிந்த உபுல் குமார ( வயது 46 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று வியாழக்கிழமை அதிகாலை குறித்த நபர் தனது காரில் கல் குவாரி ஒன்றிற்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் விவசாயி எனவும், அவர் அதிக மதுப்பழக்கம் உள்ளவர் எனவும் அவரது மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.