6 வயது சிறுமி துஷ்பிரயோகம் : இளைஞன் கைது

வவுனியாவில் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக இளைஞன் ஒருவரை பூவரசன்குளம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வரும் நிலையில் , தந்தையும் இல்லாத இச்சிறுமி பூவரசம்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் மாதாந்த கொடுப்பனவில் தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் அந்தரங்க உறுப்பிலிருந்து இரத்தப்போக்கு ஏற்பட்டதையடுத்து , சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்த நிலையில் இது தொடர்பாக பொலிசாரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

இதையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் , இச்சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில் தங்கியிருந்த இளைஞனை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்