6 மாதங்களில் வீதி விபத்துகளால் 2000 பேர் பலி
நடப்பாண்டின் கடந்த ஆறு மாதங்களில் 2,000 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்திற்குப் பொறுப்பான துணை பொலிஸ் கண்காணிப்பாளர் இந்திக ஹபுகோட தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துகள் வீதிகளுக்கு பொருத்தமற்ற வாகனங்கள் மற்றும் பொறுப்பற்ற ஓட்டுநர்களால் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் துறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், வீதி விபத்துக்களால் 7,152 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றார்.
“ஜனவரி 1,2025 முதல் ஜூன் 15, 2025 வரை, இந்த 6 மாதங்களில் 1,133 அபாயகரமான சாலை விபத்துகளில் கிட்டத்தட்ட 2,000 பேர் மரணித்துள்ளனர். இது மிகவும் பேரழிவு தரும் சூழ்நிலை என்றும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரி பாகங்கள் ஜூலை 1 ஆம் திகதி முதல் அகற்றப்படும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.