6 இளம் பெண்கள் அடுத்தடுத்து மர்ம மரணம்: சீரியல் கொலையா?
அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் போர்ட்லாந்து என்ற நகரை சுற்றி கடந்த பெப்ரவரி மாதம் முதல் பெண்கள் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 19ஆம் திகதி தென்கிழக்கு போர்ட்லாந்து பகுதியில் உள்ள பிலெசன்ட் பள்ளத்தாக்கு பகுதியில் 22 வயதான கிரிஸ்டன் ஸ்மித் என்ற பெண்ணின் உடல் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த இளம்பெண்ணின் மரணத்தின் காரணம் இதுவரை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
அடுத்ததாக ஏப்ரல் 8ஆம் திகதி அன்று கிளார்க் கவுன்டி என்ற பகுதியில் ஜோனா ஸ்பீக்ஸ் என்ற பெண்ணின் உடல் ஒரு பாழடைந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண்ணின் சடலத்தின் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் காயங்கள் இருந்த நிலையில், கொலையாளி உடலை அந்த இடத்தில் போட்டு சென்றிருப்பார் என்று தெரியவந்தது.
தொடர்ந்து ஏப்ரல் 24ஆம் திகதி அன்று இரு பெண்களில் உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலம்பியா ரிவர் ஹைவேயில் 24 வயது சாரிட்டி லின் என்ற பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதேநாளில் லென்ட்ஸ் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண்ணின் வயது 25 தொடக்கம் 40க்கு உட்பட்டதாக இருக்கும் என்ற நிலையில், அவரை அடையாளம் காணும் முயற்சி நடைபெறுகிறது.
இந்நிலையில், கடைசியாக ஏப்ரல் 30ஆம் திகதி அன்று 31 வயதான பிரிட்கெட் லியான் என்ற பெண்ணின் உடல் நார்த்வெஸ்ட் போல்க் கவுன்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இந்த பெண் மில்வாய்கே பகுதியை சேர்ந்தவர் எனவும் அடிக்கடி போர்ட்லாந்துக்கும் வந்து செல்வார் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலைகள் அனைத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதாக, இது சீரியல் கொலை சம்பவமா என்ற கோணத்தில் பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
;