6 இந்திய மீனவர்கள் விடுதலை

அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் 6 இந்திய மீனவர்களும் நேற்று செவ்வாய் கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த 6 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட 2 படகுகளை அரசுடைமையாக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 23 ஆம் திகதி குறித்த 6 மீனவர்களும் கைது செய்யப்பட்டதுடன், 2 படகுகளும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிட தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்