5ஆவது முறையாகவும் ரஷ்யாவின் ஜனாதிபதியானார் புதின்
ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புதின் 88 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாகியுள்ளார்.
1999இல் அதிகாரத்திற்கு வந்த புதின், ரஷ்யாவில் மிகவும் சக்திவாய்ந்த நபராக உருவெடுத்துள்ளார்.
ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் கடந்த 200 ஆண்டுகளில் அதிக காலம் தலைவராக இருந்தவர்கள் பட்டியலில் ஜோசப் ஸ்டாலினது சாதனையை புதின் முறியடித்துள்ளார்.
உக்ரைன் போருக்குப் பிறகு அங்கே நடக்கும் முதல் தேர்தலாக இது இருக்கும் நிலையில், புதின் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்