அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 4ஆவது ஆண்டு நினைவு தினம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 4ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று ஞாயிற்று கிழமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பதுளை மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது.

இவ் நினைவு தின நிகழ்விற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டி.வி.சென்னன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது அமரர் ஆறுமுகன் தொண்டமானின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

அந்த நிகழ்வில் காங்கிரஸின் பதுளை மாவட்ட அமைப்பாளர் எஸ்.கே.சுப்பிரமணியம் பதுளை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சுந்தரவதனி மற்றும் காரியாலயத்தில் உத்தியோகத்தர்கள் தோட்ட தொழிலாளர் சிலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்