-கிளிநொச்சி நிருபர்-
சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, 40 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு நெத்தலி ஆற்றுப் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் இரண்டு சந்தேக நபர்கள் உரப்பையில் மறைத்து 40 லீற்றர் கசிப்பினை புதுக்குடியிருப்பு நோக்கி எடுத்துச் சென்றனர்.
அவ்வேளை, இரவு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் வீதி சோதனையின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், அவர்களிடமிருந்து 40 லீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பினை எடுத்துச் செல்வதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பவை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சதுரங்க தெரிவித்துள்ளார்.