கனடாவில் 40 விமானப் பயணங்கள் இரத்து

கனடாவின் வெஸ்ட் ஜெட் விமான சேவை நிறுவனம் 40 விமான பயணங்களை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

குறித்த விமான சேவை நிறுவன பணியாளர்கள் இன்று வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். இதன் காரணமாக வெஸ்ட்ஜெட் விமான சேவை நிறுவனம் விமான பயணங்களை இரத்து செய்வதாக தெரிவித்துள்ளது.

இந்த விமான பயணங்கள் இரத்து செய்த காரணத்தினால் 6500 பயணிகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழிற்ச சங்கம் எடுத்த கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் விமான சேவை நிறுவன பணியாளர்கள் போராட்டத்தில் குதிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்