
40 இந்திய மீனவர்களை விடுவிக்க தீர்மானம்
வடக்கு கடற்பரப்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட 40 இந்திய மீனவர்களையும் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மன்னாரில் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 18 மீனவர்களும் பருத்தித்துறையில் ஒரு படகுடன் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் ஊர்காவற்றுறையில் 3 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களுமே நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
