போதை மாத்திரைகளுடன் கைதான பிரதேச ஊடகருக்கு 14 நாட்களுக்கு மேலும் விளக்கமறியல் நீடிப்பு

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தின் மொறவெவ பொலிஸ் பிரிவில் போதை மாத்திரைகளுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதேச ஊடகவியலாளரை மொறவெவ நீதிமன்ற நீதவான் முன்னிலையில் 20.5.2024 அன்று ஆஜர்படுத்தப்பட்ட போது , எதிர்வரும் மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த ஊடகவியலாளர் பிரதான வீதி, றொட்டவெவ , மொறவெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என்றும் இவர் 30 போதை மாத்திரைகள் உட்பட மோட்டார் போக்குவரத்து ஆவணங்கள் 45 உடன் கடந்த 05.05.2024 ஆம் திகதி அன்று மொறவெவ பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

குறித்த பிரதேச ஊடகவியலாளர் அரச, தனியார் ஊடகங்களில் பிரதேச செய்தியாளராகவும் மொறவெவ அரச வைத்தியசாலையின் ஊழியர் எனவும் தெரியவருகிறது.

மோட்டார் போக்குவரத்து ஆவணங்கள் தொடர்பிலான பிரிதொரு விசாரனை மூலமாகவும் வழக்கு ஒன்றும் இடம் பெற்றுவருகின்றமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை மொறவெவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்