4 வயது சிறுவனுக்கு எமனான பாடசாலை வேன்

அம்பாறையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

பெரியநீலாவணை பகுதியை சேர்ந்த அருணா ஹர்க்ஷான் (வயது – 4) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டிற்குள் இருந்த குறித்த சிறுவன் கேற் திறந்திருந்த நிலையில் தற்செயலாக வீதிக்கு ஓடி வந்துள்ளார். இதன்போது பாதையால் சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும் வேன் சிறுவனை மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் சிறுவன் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும் சடலம் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்