4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் பிறந்த அதிசய குழந்தை!

இந்தியாவில் பீகாரில் 4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் குழந்தை பிறந்துள்ளது.

பீகார் மாநிலத்தின் சரண் மாவட்டம், சாப்ராவில் உள்ள சஞ்சீவானி முதியோர் இல்லத்தில் நேற்று முன்தினம் புதன் கிழமை பிரசுதா பிரியா தேவி என்ற பெண்ணிற்கு நான்கு கைகள், நான்கு கால்கள் மற்றும் நான்கு காதுகளுடன் பெண் குழந்தையொன்று பிறந்தது.

மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் அனில் குமார் குறித்த குழந்தை குறித்து தெரிவிக்கும் போது பிரசுதா பிரியா தேவிக்கு ஒரு தலை, நான்கு காதுகள், நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகள், இரண்டு முள்ளந்தண்டு வடங்கள், மார்பில் 2 துடிக்கும் இதயங்கள் கொண்ட குழந்தை பிறந்தது.

எனினும் பிறந்த அந்தக் குழந்தை துரதிர்ஷ்டவசமாக 20 நிமிடங்களுக்குப் பிறகு இறந்து விட்டது.

அத்துடன் இது போன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நடக்கும். ஒரு பெண்ணின் கருப்பையில் ஒரு முட்டையிலிருந்து 2 குழந்தைகள் உருவாகும்போது, சில காரணங்களால் இரட்டைக் குழந்தைகள் பிரிவதில் தாமதம் ஏற்பட்டாலோ, அந்த முட்டைக் கரு முழுமை அடையாமல் இருந்தாலோ இதுபோன்று வித்தியாசமான குழந்தைகள் பிறக்கும் என்றார்.