ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் சந்தேகநபராக பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீதான பிணை மனு தொடர்பான உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னரே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.









