320 ஆண்டுகளுக்கு பின் தன்னை மூடிக்கொண்ட பத்திரிகை

ஆஸ்திரியாவின் வியன்னாவை தளமாகக் கொண்டு இயங்கிய உலகிலேயே மிகப் பழமையான 320 ஆண்டுகள் தொடர்ந்து நாளிதழை வெளியிட்டு வந்தசெய்தித்தாள் என்ற பெருமையைப் பெற்ற வீனர் ஜெய்துங் தனது வெயியீட்டை நிறுத்தி நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை தனது இறுதி செய்தித்தாளை வௌியிட்டது.

அரசுக்கு சொந்தமான வீனர் ஜெய்துங் செய்தித்தாள் நிறுவனம், நிதி நெருக்கடி காரணமாக, வருவாய் இழப்பை சந்தித்ததால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

வீனர் ஜெய்துங் வெளியீட்டின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை, தனது செய்தித்தாளின் முகப்புப் பக்கத்தில் 116,840 நாட்கள், 3,839 மாதங்கள், 320 ஆண்டுகள், 12 அதிபர்கள், 2 குடியரசுகள், 1 நாளிதழ் என அச்சிட்டு, தனது செய்தித்தாளுக்கு தானே இறுதி அஞ்சலி செலுத்தி முகப்புப் பக்கம், டிவிட்டர் பக்கத்தில் தனது இறுதி செய்தித்தாளை பகிர்ந்திருந்தது.

வியன்னாவை சேர்ந்த ஏராளமான மக்கள் இந்த செய்தித்தாளை வாங்கி பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளப்போவதாக உணர்ச்சிபொங்க தங்களது வருத்தத்தைப் பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்