3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

களுத்துறை, காலி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, அகலவத்தை மற்றும் புளத்சிங்கள ஆகிய பிரதேசங்களுக்கும், காலி மாவட்டத்தின் நாகொட, எல்பிட்டிய பிரதேசங்களுக்கும் மற்றும் பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேசத்திற்கும் இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்