3 மாடி கட்டடத்தில் தீ பரவல்: ஏராளமான சொத்துக்கள் நாசம்

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றின் மேல் மாடியில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ பரவலில் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்த இருவர் எவ்வித காயங்களுமின்றி தப்பியுள்ளனர்.எனினும் தீ பரவலினால் ஏராளமான சொத்துக்கள் நாசமடைந்துள்ளதாகவும் மின்கசிவு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த 8 தீயணைப்புப் படையினர் தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்