Last updated on April 28th, 2023 at 04:47 pm

3 கோடி 15 இலட்சம் பெறுமதியுடைய தங்கத்துடன் நால்வர் கைது | Minnal 24 News %

3 கோடி 15 இலட்சம் பெறுமதியுடைய தங்கத்துடன் நால்வர் கைது

-நுவரெலியா நிருபர்-

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஞ்சர் தோட்ட மேற்பிரிவில், சுமார் 3 கோடி 15 இலட்சம் பெறுமதியுடைய ஒன்றரை கிலோ மதிப்புடைய தங்கத்தை நேற்று வியாழக்கிழமை பொலிஸார் மீட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக பெண் உட்பட நால்வரை கைது செய்துள்ளனர்.

நோர்வூட் பொலிஸாரும், குற்றத்தடுப்பு பிரிவினரும் இணைந்து நடத்திய தேடுதலின் போதே இத்தொகை தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நோர்வூட் நகரில் உள்ள நகைக்கடையொன்றில் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் திகதியளவில் ஒரு தொகை நகைக் திருடப்பட்டதாக நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் உரிமையாளர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, குறித்த கடையில் சுமார் 10 வருடங்களாக வேலை செய்த பெண்னொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அவரது கைரேகை அடையாளங்களும் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, கடந்த ஆறுமாத காலப்பகுதியில் தொடர்ச்சியாக விசாரணைகளையும் தேடுதல்களையும் மேற்கொண்டு வந்த நோர்வூட் பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த நகைகளை மீட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் பெண்னொருவர் உட்பட நால்வரை கைது செய்துள்ளனர்.

சங்கிலி, தோடு, மாலை என பலதரப்பட்ட நகைகளே இதன்போது மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கும் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்திய பெண்ணின் கைரேகையும் மீட்கப்பட்ட பொருட்களில் உள்ள கைரேகையும் ஒரே மாதிரியானவை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.