3 கோடி பொறுமதியான கொக்கெய்ன் போதை மாத்திரைகளை விழுங்கிய நிலையில் பெண் கைது

கொக்கெய்ன் போதை மாத்திரைகளை விழுங்கிய நிலையில் விமான நிலையத்தில் வந்திறங்கிய வெளிநாட்டுப் பெண்ணொருவர் விமான நிலையத்தில் வைத்து கடந்த 12 ஆம் திகதி சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மடகஸ்கரைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் எத்தியோப்பியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்து இந்தியாவின் மும்பையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 3 கோடியே 50 இலட்சம் ரூபா என, சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதைப்பொருளை விழுங்கிய நிலையில் கைது செய்யப்பட்ட பெண்ணை நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று கொக்கெய்ன் மாத்திரைகள் வெளியே எடுக்கப்பட்டன.

இதையடுத்து மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்