
28 வருடங்கள் வளர்த்த தாத்தா பாட்டியை கழுத்து அறுத்து கொன்ற பேரன்
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வடக்கேகாடு பகுதியில் தனது சொந்த தாத்தா பாட்டியை கழுத்தை அறுத்து பேரன் கொலை செய்துள்ளான்.
வடக்கேகாடு பகுதியைசார்ந்தவர்கள் வயதான தம்பதியர்களான அப்துல் மற்றும் ஜமீலா.இவர்களது மகள் முதல் திருமணம் செய்து விவாகரத்து பெற்று இரண்டாவதாக திருமணம் செய்து கொல்லம் பகுதியில் வசித்து வருகிறார்.இவரது முதல் திருமணத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மகளது இரண்டாவது திருமணத்துக்கு பிறகு அக்மல் என்ற மகனை அப்துல் – ஜமீலா தம்பதியர் வளர்த்து வந்துள்ளனர்.
28 வயதான அக்மல் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. போதை பொருட்கள் பயன்படுத்தி தன்னிலை மறந்து பணம் கேட்டு வயோதிபர்களை துன்புறுத்தி வந்துள்ளான்.
உறவினர்கள் போதை பொருள் பழக்கத்தில் இருந்து அக்மலை விடுவிக்க பல வழிகளை முயற்சி செய்தும் எதுவும் பலன் அளிக்கவில்லை ,மேலும் போதைக்கு அடிமையாகி தன்னிலை மறந்து வயதான தம்பதிகளை கொல்ல வாய்ப்புகளும் உண்டு என உறவினர்கள் அவர்களுடன் வயதான தம்பதிரை வர சொல்லி கூறியுள்ளனர்.
பேரபிள்ளையை தாங்கள் கை விட்டால் அவன் தனித்து விடுவான். 28 வருடங்களாக வளர்த்த தங்களை அவன் எதுவும் செய்ய மாட்டான் என தம்பதியினர் நம்பியுள்ளனர்.ஆனால் அதை பொய்யாக்கும் வகையில் நேற்று முன் தினம் வியாழக்கிழமை போதை பொருட்கள் வாங்க காசு கேட்டுள்ளார் அக்மல் ஆனால் தம்பதியினர் அதைக் கொடுக்க மறுத்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்து தன்னிலை மறந்த அக்மல் கத்தியால் இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
பின்பு அங்கிருந்து தலை மறைவான அக்மல் பாட்டியின் நகைகளுடன் பொலிஸாரிடம் சிக்கியதை தொடர்ந்து கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார்.
மேலும் நேற்றைய தினம் வெள்ளி கிழமை கொலை நடந்த வீட்டிற்கு பொலிஸார் அக்மலை அழைத்து வந்து கொலை செய்தது எப்படி என்பதும் மேலும் பல ஆதாரங்களை திரட்டிய பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
