வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா கொடியேற்றதுடன் ஆரம்பம்!
யாழ்ப்பாணம் – வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவானது நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட பூசைகள் இடம்பெற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக்குருக்கள் தலமையிலான குருமார் திருவிழா கிரியைகளை மேற்கொண்டதுடன் சுப வேளையில் கொடியேற்றும் இடம்பெற்று சிறப்பு பூசைகள் இடம்பெற்றன.
திருவிழாவிற்கான சுகாதார வசதிகளையும் ஏனைய பணிகளையும் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் பருத்தித்துறை பிரதேச சபையும், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் வழங்குகின்றது.
பருத்தித்துறை பொலிஸ் நிலையம் மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.