அரச வைத்தியசாலையில் ஒரே நாளில் 24 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள அரச வைத்தியசாலையில் ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மருந்துப் பற்றாக்குறை மற்றும் போதிய பணியாளர்கள் வைத்தியசாலையில் இல்லாமையினால் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த 24 பேரில் 12 குழந்தைகளும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.