சம்மாந்துறையில் நரிகள் நடமாட்டம்
-அம்பாறை நிருபர்-
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு மல்கம்பிட்டி பகுதிகளில் வயல் அறுவடை இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் அப்பகுதியில் நரிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது.
இலங்கை நரிகள் ( Sri Lankan Jackal) அல்லது தென்னிந்திய குள்ள நரிகள் என அழைக்கப்படும், கேனிஸ் ஆரியஸ் நாரியா (Canis aureus naria) எனப்படும் நரிகளின் நடமாட்டம் குறித்த பகுதிகளில் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வயலின் அடிக்கட்டை எது? நரி எது? என்று தெரியாத உருமறைப்புடன் அப்பகுதியில் இவை வேட்டையில் ஈடுபட்டு வருகின்றது.
இவ்வாறான நரிகள் சூழற்றொகுதியின் சமனிலைக்கு மிக முக்கியமானது. நரிகள் மயில்கள் போன்ற பீடைகளைக் கட்டுப்படுத்தியும், மற்ற சிறு வேட்டையாடிகளின் குடித்தொகைகளை சமனிலைப்படுத்தியும் விவசாயிகளுக்கும், மக்களுக்கும் நன்மைகள் பயக்கின்றன என இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் உயிரியல் விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், பிரிவுத் தலைவருமான ஏ.எம்.றியாஸ் அகமட் குறிப்பிட்டுள்ளார்.